என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளி தற்கொலை முயற்சி"
சேலம் பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36) அச்சக தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் அடிக்கடி மது குடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனைவி கங்காவிடம் கேட்டார். அவர் பணம் கொடுக்காததால் விரக்தி அடைந்த சீனிவாசன் வீட்டில் உள்ள ஒரு அறையில் சென்று கதவை பூட்டி கொண்டார்.
மனைவி மற்றும் உறவினர்கள் கதவை தட்டியும் திறக்காததால் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கதவை திறக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதை பார்த்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூக்கில் தொங்கிய சீனிவாசனுக்க ஆரிஸ் என்ற மகனும், கவுசல்யா என்ற மகளும் உள்ளனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவரது மகன் கோகுல் (5), மகள்கள் அஸ்வினி (4), மோனிஷா (1½). நேற்று சக்திவேல் தனது குழந்தைகள் 3 பேரையும் அழைத்து கொண்டு வாணியம்பாடி பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, 3 குழந்தைகளின் மீது ஊற்றிவிட்டு, அவரும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, தடுத்து நிறுத்தினர்.
பின்னர் உறவினர்களுக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த உறவினர்கள் சக்திவேலையும், அவரது குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் போலீசார் சக்திவேலிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். இருப்பினும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடக்கரையில் ஏற்பட்ட உடைப்பால் நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர் நேற்று தனது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றார்.
பின்னர் வீட்டை பார்வையிடுவதற்காக ரவி நேற்று மாலை வந்தார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய அவரது கூரைவீடு இடிந்து கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனவேதனையில் இருந்த ரவி, நேற்று இரவு திடீரென பூச்சி மருந்தை குடித்து விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சங்கரன்கோவில் அருகே உள்ள மேல மரத்தோணி காலனி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரேசுவரி (வயது 35). ஆடு மேய்க்கும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (45), கூலி தொழிலாளி.
நேற்று முன்தினம் மாலை ஊர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சங்கரேசுவரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்கரேசுவரிக்கு கருப்பசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததும், இதனால் ஏற்பட்ட தகராறில் சங்கரேசுவரி கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கருப்பசாமியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஊர் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் கருப்பசாமி விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்கரேசுவரியின் உறவினர்கள், ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
கருப்பசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், போலீசுக்கு பயந்து கருப்பசாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கருப்பசாமிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே கருப்பசாமி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்